நாங்கள் யார் ?
உழவருலகம் நிறுவனம், தமிழக விவசாயிகளின் நலன் கருதி 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சேவைகளை வழங்குவதன் மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
முதலில் கரூர் மாவட்டம், குளித்தலையை மையமாகக் கொண்டு துவங்கிய உழவருலகம் நிறுவனம், தற்போது கரூர் மாவட்டம், உப்பிடாமங்கலம், No.18, S.S.K Street, லிங்கத்துறை தலைமையகத்துடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தனது சேவைகளை விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைவர் அவர்கள், இளநிலை விவசாயப் பட்டப்படிப்பை முடித்ததுடன், நபார்டு (NABARD) மற்றும் (MANAGE) இணைந்து நடத்தும் அக்ரி கிளினிக் & அக்ரி பிஸினஸ் சென்டர் (AC&ABC) பயிற்சியையும் பெற்றுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் விவசாய தகவல் மையமான (Kisan Call Center) ‘கிசான் கால்செண்டரில்’ 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து, எண்ணற்ற தமிழக விவசாயிகளுக்கு தொலைபேசி மூலம் பல்வேறு தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிய அனுபவம் பெற்றவர்.
அவரது நோக்கத்திற்கும் சேவைக்கும் உறுதுணையாக விவசாயிகள், விவசாய வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பயிற்றுநர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இணைந்து செயல்படுவது இந்த நிறுவனத்தின் முக்கிய வலுவாகும்.
🏭 Industrial Landscaping சேவைகள்
எங்கள் நிறுவனம் தொழிற்துறை வளாகங்களுக்கு நவீன தரத்திற்கு ஏற்ப பசுமை வளம் உருவாக்கும் Industrial Landscaping பணிகளை திறமையாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக TOSIBA, NACTO and FRESHARA போன்ற முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிற்சாலைகளிலும் எங்களின் Landscaping பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், தொழிற்சாலைகளின் அழகிய சூழலையும் உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள், நிறுவனங்களின் பணியிடச் சூழலை மேலும் இலகுவாக்கும் விதமாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.
எங்கள் நிறுவனம், இந்திய அரசின் வணிகச்சின்னம்/வர்த்தக முத்திரை (Trademark) பதிவை 05.01.2021 அன்று பெற்று சட்டப்பூர்வமாக செயல்பட்டு வரும் நிறுவனமாகும். மேலும், 19.10.2023 முதல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (Import & Export) உரிமச் சான்றையும் பெற்றுள்ளது.
உழவருலகம் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்காக பல்வேறு விவசாய மற்றும் தொடர்புடைய சேவைகளை விரிவாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. வருங்காலத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, உற்பத்தியை அதிகரித்து, தமிழ் நாட்டை உலகத் தரத்தில் விவசாய முன்னோடியாக கொண்டு சேர்ப்பதே நிறுவனத்தின் முக்கிய இலக்கு ஆகும்.